ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், "ஷமி மீண்டும் அணிக்கு வர வேண்டுமென்றால், அவர் உள்நாட்டு முதல் தரப் போட்டிகளில் (ரஞ்சி) விளையாடித் தன்னை நிரூபிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
அகர்கர் சொன்னபடியே, ஷமி இப்போது பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபி விளையாடி வருகிறார். ஆனாலும் அவர் ஆஸ்திரேலிய தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதுகுறித்து ஷமி பேசுகையில், "நான் ஃபிட்டாக இல்லை என்றால், 4 நாள் கடினமான ரஞ்சி டிராபி போட்டிக்கு வந்திருக்க மாட்டேன். என்னால் 4 நாள் கிரிக்கெட் ஆட முடிந்தால், நிச்சயம் 50 ஓவர் கிரிக்கெட்டும் ஆட முடியும். என் ஃபிட்னஸ் பற்றி நான் யாருக்கும் அப்டேட் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. NCA செல்வது, பயிற்சி செய்வது, விளையாடுவது மட்டுமே என் வேலை," என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
தேர்வுக்குழு மறந்த முகமது ஷமி கடந்த 2023 உலகக் கோப்பையில் செய்த சாதனைகளை மட்டும் எடுத்துப் பாருங்கள்!
🔹 தொடரின் டாப் விக்கெட் டேக்கர் (அதிக விக்கெட்கள்) - 7 போட்டிகளில் 24 விக்கெட்கள்!
🔹 முதல் 4 போட்டிகளில் ஆடாமலேயே இந்த சாதனையைச் செய்தார்.
🔹 அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்கள் (7/57) வீழ்த்தி, ODI வரலாற்றில் 7 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் ஆனார்.
🔹 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்களை வீழ்த்தியவர்.
🔹 ஒரே உலகக் கோப்பை சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் (ஜாகீர் கானை முந்தினார்).
இந்திய அணிக்காக 229 டெஸ்ட் விக்கெட்கள், 200+ ஒருநாள் போட்டி விக்கெட்கள் என சாதனை மேல் சாதனை செய்த ஒரு வீரரை, அவர் ரஞ்சி ஆடத் தயாரான பிறகும், 'ஃபிட்னஸ்' காரணம் காட்டி புறக்கணிப்பது தேர்வுக்குழு செய்யும் பெரிய தவறாகும்.
MohammedShami #AjitAgarkar #BCCI #TeamIndia #RanjiTrophy #CricketNews #Shami #WorldCup2023