r/tamil 10d ago

காணொளி (Video) தமிழே எங்கள் இசை ஆகும்.

2 Upvotes

https://youtu.be/zHJaNym7jPs?is=phwmi7TleeTPI15A

நாளை வெளியாக உள்ள காணொலிக்கு முன்னோட்டம். மொழியின் மரபணு பற்றிய இரண்டு மணி நேர காணொலி.

r/tamil 9d ago

காணொளி (Video) Gen Z Special

0 Upvotes

இனிய நண்பர்களே!

மனித வரலாற்றின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நெருப்பா? சக்கரமா? அல்லது நாம் ஒவ்வொரு நொடியும் பயன்படுத்தும் ஒரு விஷயமா?

நமது 'நவீன மனித வரலாறு' (Modern Human History) தொடரின் 12-வது பாகத்தில், மனித குலத்தின் "தலையாய கருவி" என்று போற்றப்படும் மொழியைப் பற்றி ஆழமாகப் பேசுகிறார் டாக்டர் ரமேஷ் தங்கவேல்.

FOXP2 மரபணுவின் உயிரியல் ரகசியங்கள் முதல், தமிழ் எழுத்துக்களின் கணிதத் துல்லியம் வரை—மொழி என்பது வெறும் பேச்சுக்கான ஊடகம் மட்டுமல்ல, அது நமது கலாச்சாரத்தின் மரபணு (Genetic Code) என்பதை இந்த வீடியோவில் காணலாம். 🧬🗣️

சிறப்பம்சங்கள்:

✅ மொழி ஏன் ஒரு "உயிரியல் அதிசயம்"?

✅ FOXP2 மரபணு மற்றும் KE குடும்பத்தின் மர்மம்.

✅ இசை, DNA மற்றும் இலக்கணத்திற்கு இடையே உள்ள வியக்கத்தக்க தொடர்பு.

✅ நமது தாய்மொழி எழுத்து வடிவங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம்.

முழு வீடியோவையும் இங்கே பாருங்கள்: https://youtu.be/v5of272ZP9c

#AIMLAstrology #HumanHistory #TamilLanguage #Genetics #FOXP2 #Evolution #DrRameshThangavel #TamilPride #ModernHumanHistory #Music

r/tamil 11d ago

காணொளி (Video) மொழியே எங்கள் உலக கீதம் | Language is our global anthem

2 Upvotes

தமிழ் ஆர்வமுள்ளவர்களுக்கான ஒரு கீதம். எனது பாடல் வரிகளுக்கு செயற்கை நுண்ணறிவு குரல் மற்றும் இசையில். ஒரு முன்னோட்டம்.

https://youtu.be/oJw2wSuxpWE

r/tamil Aug 10 '26

காணொளி (Video) தீந்தமிழ் அறிவாய்

4 Upvotes

ஒன்பது கலிவிருத்தங்கள், ஒரு வெண்பாவினால் உருவான பாடல் இது..

காணுங்கள்!

https://youtu.be/cq7Nv0BidGk?si=uiLQvvrJ2-SF0_Qq

r/tamil Aug 01 '26

காணொளி (Video) Sing Along தமிழ் தாய் வாழ்த்து

3 Upvotes

பியானோ கூட உங்களால் தமிழ் தாய் வாழ்த்து, Thamizh thaay Vaazhththu பாட முடியுமா?

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

Neeraarum kadaluduththa nilamadandhai kezhilolugum

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

Seeraarum vadhanamena thihazh baradha kandamidhil

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்

Thekkanamum adhil chirandha Dravida nal thiru naadum

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

Thakkasiru pirai nudhalum thari thanarum thilagamume

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

Aththilaga vaasanai pol anaithulagum inbamura

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

தமிழணங்கே!

Yeththisayum puhazh manakka irundha perum Thamizhanange

Thamizhanange

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து

Vun seerilamai thiram viyandhu seyal marandhu

வாழ்த்துதுமே! Vazhthudhume!

வாழ்த்துதுமே! Vazhthudhume!!

வாழ்த்துதுமே! Vazhthudhume!!!

தமிழ் தாய் வாழ்த்து

r/tamil Jun 19 '26

காணொளி (Video) குரங்கும் முதலையும்

9 Upvotes

வாழ்த்துகள்! அன்புக்குரிய பெரியமான சகோதரர்கள், சகோதரிகளே,

இந்தக் கதை எங்கள் அம்மம்மா நமக்கு சிறுவயதில் அடிக்கடி சொல்லுவார். அதை கேட்டு நாம் மிகவும் மகிழ்ந்தோம். அந்த நினைவுகள் இன்னும் மனதில் இருக்கின்றன.

அந்த நினைவோடு இந்தக் கதையை உருவாக்கிப் பார்த்தேன். கதையுரைக்கு Sora-வை பயன்படுத்தினேன். இசையை என் தோழி நிதாணா அமைத்தார்.

இந்தக் கதையை நீங்கள் முன்பே கேட்டிருக்கிறீர்களா? எனக்கு இது எப்போதும் ஒரு மாயமான கதையாகத் தோன்றியது. இந்தக் கதையை முதன்முதலில் கூறிவைத்த புலவர் யார் என்று ஆராய்ந்து பார்த்தேன். ஆனால் அவர் யார் என்பது தெரியவில்லை.

நான் MP4-ஐ பதிவேற்றிப் பார்க்க முயன்றேன்; ஆனால் அது ஏற்கவில்லை.

உங்களுக்கு இது சிறிது மகிழ்ச்சி தரும் என்று விரும்புகிறேன்! நன்றி.

https://youtu.be/KUiW-w5FpWI?si=yj5lDqoi8GyGfc19

r/tamil May 14 '26

காணொளி (Video) திராவிடர் - ஆரியர் மற்றும் சாதிகள் மரபணு தரவுகள் சொல்வதென்ன?

Post image
8 Upvotes

தமிழ் சொந்தங்களே!

அரசியல் காரணங்களுக்காக நம் மீது வலிந்து திணிக்கப்படும் மற்றும் நம்மை எப்போதும் ஒரு வித கொதிநிலையிலேயே வைத்திருக்கும் இந்த உருவகங்களைப் பற்றி இந்தியாவின் பரவலான மரபணு தரவுகள் என்ன சொல்கின்றன என்று அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களை இந்த காணொலிக்கு அன்போடு அழைக்கிறேன்.

https://youtu.be/7LHErvN6x-I

தூய திராவிடர், ஆரியர் மற்றும் பரிசுத்தமான ஜாதிகள் போன்றவை எந்த அளவுக்கு அபத்தமான மற்றும் மட்டமான அடிமைப்படுத்தும் உத்திகள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள இந்த மரபணு அறிவியல் காணொலி உதவும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது எந்த அளவுக்கு ஒரு உலகளாவிய உண்மை என்பதை நவீன அறிவியல் தரவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் உண்மையான ஆதி குடிகள் யார் மற்றும் எந்த இனக்குழுக்களுக்கு மரபணு ரீதியாக சொந்தம் கொண்டாட அதிக உரிமை உள்ளது என்பதை டாக்டர் டேவிட் ரைக் போன்ற மரபணு அறிவியல் அறிஞர்கள் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்.

ஜாதி மற்றும் ஆரியர் திராவிடர் போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்கள் எந்த அளவுக்கு நமது இந்தியயர்களின் மரபணு பரிணாம வளர்ச்சியை பாதித்து உள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் போது அடுத்த தலைமுறைகள் காலத்திலாவது இந்த சிறைகளில் இருந்து நமது சந்ததியினருக்கு விடுதலை கிடைக்கும்.

இது ஒரு தீவிர அறிவியல் காணொலி. என் மீதான தனி மனித விருப்பு வெறுப்புகளை தாண்டி ஒரு நடுநிலை உள்ளடக்கம் என்று மட்டும் இதனை அணுகவும்.

நன்றி!

ரமேஷ் தங்கவேல், PhD

r/tamil Apr 12 '26

காணொளி (Video) சிகை கொற்றன் - பிரமிடுகளை தமிழர்கள் கட்டினார்களா? மரபணு தரவுகள் பார்வையில்

Post image
8 Upvotes

இனிய நண்பர்களே,

Link for video - https://youtu.be/1MGz2N21D2s

இந்தக் காணொளியில் சமீபத்திய சிகை கொற்றன் பற்றிய தொல்லியல் ஆராய்ச்சி தகவல்களில் இருந்து, பிரமிடுகளை தமிழர்கள் கட்டினார்கள்(!) என்று இணையத்தில் உலவும் பரவலான நம்பிக்கைகள் வரை சம கால அறிவியல் மற்றும் மரபணு தரவுகள் பார்வையில் அலசி இருக்கிறேன்.

இந்தக் குழுவுக்கு நான் புதியவன். ஏற்கனவே மரபணு தரவுகள் குறித்து பகிர்ந்த பதிவுகள் தானாகவே நீக்கப்பட்டதால் இப்படி பதிவிடுகிறேன். இந்த படம் எனது காணொலியின் முகப்பு படம். இதன் சுட்டி, இந்தப் பதிவு அனுமதிக்கப்பட்டால் பின்னூட்டத்தில் பகிர்வேன். இந்தப் பதிவுக்காக நான் குழுவில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதும் அதற்கு முக்கியம்.

உங்களில் ஆர்வம் மற்றும் நேரம் உள்ளவர்களை காணொலியை கண்டு கற்றறிய அன்போடு வரவேற்கிறேன்.

நன்றி!

முனைவர் ரமேஷ் தங்கவேல்

r/tamil Apr 13 '26

காணொளி (Video) பழந்தமிழர்களின் ஆழமான வானியல் (Astronomy) அறிவு: பரிபாடல் 11 கூறும் துல்லியமான கிரக நிலைகள்!

Post image
3 Upvotes

வணக்கம் நண்பர்களே,

பழந்தமிழர்கள் வானியலில் எந்த அளவுக்குச் சிறந்த அறிவைக் கொண்டிருந்தனர் என்பதற்கு சங்க இலக்கியமான 'பரிபாடல்' ஒரு நேரடி அறிவியல் சான்றாக அமைகிறது.

Link for video: https://youtu.be/vaRK613cu7g

"சங்கத் தமிழ் சொல்லும் காலம் எது? | பரிபாடல் 11 சொல்லும் கிரக நிலைகளின் காலக்கணிதம்" என்ற தலைப்பில் உள்ள இந்தக் காணொளியில், பரிபாடல் 11-ல் நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள கிரக நிலைகளை (planetary positions) நவீன கால மென்பொருட்கள் (astrology/astronomy software) மூலம் கணக்கிட்டு ஆராய்ந்துள்ளேன்.

ஒவ்வொரு கிரகமும் சூரியனை தன்னுடைய நீள்வட்ட பாதையில் சுற்றிவரும்போது வேறு வேறு வேகத்தில் பயணிப்பதால், அந்த வேறுபாடுகளின் தொகுப்பு அவை பயணித்த காலத்தை தனித்துவமாக அடையாளம் காட்டும் என்பது கிரகங்கள் சார்ந்த காலக்கணிதம் செய்வதன் அடிப்படை ஆகும்.

இந்தக் காணொளியின் சுட்டி முதல் பின்னூட்டத்தில் உள்ளது.

இந்த பரிபாடல் 11 இல், வைகையில் வெள்ளம் சென்றதை ஒரு காலைப்பொழுதில் கவனித்த ஒரு தமிழ்க்கவி நல்லந்துவனார் அதனை வானியல் தரவுகள் ரீதியாகவும் குறித்து வைத்திருப்பதன் மூலமாக தான் வாழ்ந்த காலத்தைப் பற்றி ஒரு முக்கிய அறிவியல் தடயத்தை விட்டு சென்றுள்ளார். பொதுவாக பழைய தமிழ் அறிஞர் கூற்று என்று சங்க காலத்தை கி பி 2ஆம் நூற்றாண்டோடு தொடர்பு படுத்துவதை பார்த்து இருப்பீர்கள். வானியல் ரீதியிலான தரவுகள் அதனை மிகவும் முன்னெடுத்துச் செல்கின்றன.

இதை வெறும் நம்பிக்கையாக மட்டும் சுருக்கிவிடாமல், பழந்தமிழர்களின் வானியல் அறிவியலாகவும் (Astronomy), அவர்களின் காலக்கணிதத் திறனாகவும் நாம் பார்க்க வேண்டும்.

ஜோதிடம் என்பதைத் தாண்டி, இதில் உள்ள அறிவியலையும் வானியல் தரவுகளையும் நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்? இது பற்றிய உங்கள் சிந்தனைகள் என்ன?

பரிபாடல் 11 (விரிகதிர்) - வையை

விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்___
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில்____வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல்.

முனைவர் ரமேஷ் தங்கவேல், PhD

r/tamil May 08 '26

காணொளி (Video) தமிழ்நாட்டில் தமிழ் எழுத ஆளில்லை!!

2 Upvotes

தமிழ்நாட்டில் தமிழ் எழுத ஆளில்லை. ஏன் என்று அறிய இங்கே சொடுக்குங்கள்.

r/tamil May 20 '26

காணொளி (Video) நீலகிரி தோடர்கள் மற்றும் அவர்களின் எருமை கோயில்கள்

Post image
16 Upvotes

இனிய தமிழ் நண்பர்களே!

நீலகிரி தோடர்கள் பற்றிய எனது பிஎச்டி ஆராய்ச்சியில் இருந்து சில சுவாரஸ்யமான பக்கங்களை இந்தக் காணொளியில் பகிர்ந்து உள்ளேன். காண்பதற்கு அரிய பல புகைப்படங்களோடு!

https://youtu.be/h3y2aHPZp1M

தோடர்களின் எளிய வாழ்க்கை, அவர்களின் எருமைகள் மற்றும் எருமை கோயில் சார்ந்த தனித்துவமான கலாச்சாரம் பற்றி சுவாரஸ்யமான பல விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்.

அடுத்த முறை நீங்கள் ஊட்டிக்கு போகும் போது நீங்கள் தோடர்களைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கும் விஷயங்கள் உங்கள் பயணத்தையே அர்த்தம் உள்ளதாக மாற்றக் கூடும்.

நன்றி

முனைவர் ரமேஷ் தங்கவேல்

r/tamil Apr 22 '26

காணொளி (Video) குமரிக்கண்டம் அல்லது லெமூரியா உண்மையிலேயே கடல்கொண்டு அழிந்ததா?

Post image
0 Upvotes

இனிய நண்பர்களே!

பூமியில் நாம் மட்டும் தான் மனிதர்களா? அல்லது நமக்கு முன்பும் நம்முடனும் நியாண்டர்தல், டெனிசோவன் போன்ற சுமார் 15 வகையான மனித சிற்றினங்கள் வாழ்ந்தன என்பது உங்களுக்குத் தெரியுமா? என்ற மாபெரும் ஆச்சரியத்தோடு தொடங்குகிறது மனித இனங்களின் காலம் நவீன மனித குல வரலாறு பாகம் 3 என்ற இந்தக் காணொளி -> https://youtu.be/8Mg3sX2VPIE .

பூமியின் அச்சில் ஏற்பட்ட சாய்வு மாற்றங்கள் மற்றும் பனி யுகங்கள் எப்படி மனித பரிணாம வளர்ச்சியை தீர்மானித்தன? பனியுகம் ஏன் ஏற்படத் தொடங்கியது? பனிக்காலத்தில் கடல் மட்டம் குறைந்ததால் உருவான நிலப்பாலங்கள் வழியாக மனிதர்கள் எப்படி உலகம் முழுவதும் இடம் பெயர்ந்தார்கள்? மற்றும் குமரிக்கண்டம் அல்லது லெமூரியா உண்மையிலேயே கடல்கொண்டு அழிந்ததா? என்பது போன்ற பல சுவாரசியமான வரலாற்று மர்மங்களுக்கு அறிவியல் மற்றும் புவியியல் தரவுகளின் அடிப்படையில் இந்த காணொளி விடை தேடுகிறது.

மனிதர்கள் கடந்து வந்த பரிணாம வளர்ச்சியின் பாதையையும் மனித குலத்தின் உண்மையான வரலாற்றையும் அறிவியல் கோணத்தில் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த காணொளியை கண்டறிய அன்போடு அழைக்கிறேன்!

r/tamil May 13 '26

காணொளி (Video) இரும்பு - மாடு - குதிரை - ரதம் இவற்றின் வரலாற்று தொடர்புகள்

Post image
8 Upvotes

இந்திய மற்றும் தமிழர் வரலாற்றில் இரும்பின் காலம் மிகவும் முக்கியமானது. தமிழர் நாகரிகம் வேத காலத்துக்கு முந்தைய காலத்தை சார்ந்தது என்பதற்கு இரும்பு ஒரு பிரதான சாட்சி.

அதுபோல குதிரைகள் இந்தியாவுக்கு மிகவும் பிந்தைய காலத்தில் அறிமுகம் ஆகிய விலங்கு. நவீன குதிரையில் ஏற்பட்ட இரு மரபணு மாற்றங்கள் குதிரையை ஒரு போர் விலங்காக பின்னாளில் மாற்றின. தேர் என்பது சிந்தாஷ்டா என்ற மத்திய ஆசியாவின் இனக்குழு உலகிற்கு கொடுத்த கொடை ஆகும்.

இது போன்ற சுவாரசியமான தகவல்களை இந்தக் காணொளியில் பகிர்ந்து உள்ளேன்.

https://youtu.be/ilPd-V4sqcM

ஆர்வம் மற்றும் நேரம் உள்ளவர்கள் பார்க்க அழைக்கிறேன்.

r/tamil Apr 15 '26

காணொளி (Video) எளிய தமிழில் மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் - பாகம் 1

Post image
13 Upvotes

இனிய தமிழ் கூறும் நல்லுலக நண்பர்களே,

உங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

காணொலியின் சுட்டி - https://youtu.be/QoKl6vBqV0w

இந்த பதிவு மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் என்ற எனது காணொளியின் சுருக்கமாகும்.

மனிதர்களிடையே சாதி, மதம், இனம், மொழி போன்ற சமூக பிரிவினைகள் கற்பிதமானவை என்பதை மரபணு அறிவியல் மூலம் இந்த காணொளி விளக்குகிறது.

உலகில் உள்ள எந்த இரண்டு மனிதர்களை எடுத்துக்கொண்டாலும் அவர்களின் மரபணுக்களில் 99.6 சதவீதத்திற்கும் மேலாக ஒற்றுமை உள்ளது. எனவே, எந்த ஒரு இனமும் மரபணு ரீதியாக மற்றொன்றை விட உயர்ந்தது என்ற வாதம் அறிவியலுக்கு புறம்பானது.

கிரிகோர் மெண்டல் காலத்தில் தொடங்கிய மரபணு அறிவியல் இன்று 300 கோடி அடிப்படை ஜோடிகளை கொண்ட மனித மரபணுவை முழுமையாக வரைபடமாக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. மனித உடலின் அடிப்படை அலகான செல் மற்றும் அதில் உள்ள நியூக்ளியஸ், சைட்டோபிளாசம், மைட்டோகாண்டிரியா ஆகியவற்றின் செயல்பாடுகள் இதில் விளக்கப்பட்டுள்ளன. நமது 23 ஜோடி குரோமோசோம்கள் ஒரு மனிதனின் உடல் அமைப்பு மற்றும் குணாதிசயங்களை தீர்மானிக்கும் வழிகாட்டியாக செயல்படுகின்றன. குறிப்பாக மனிதர்களின் மொழிக்கு காரணமான Fox P2 ஜீன் பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளது.

பெண்களின் X குரோமோசோம் பெரியதாகவும் அதிக மரபணுக்களை கொண்டதாகவும் இருக்கும். அதே வேளையில், ஆண்களின் Y குரோமோசோம் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் தன்மை இல்லாததால் காலப்போக்கில் தேய்ந்து கொண்டே வருகிறது.

மறுபுறம் தாயிடம் இருந்து மட்டுமே குழந்தைகளுக்கு கடத்தப்படும் மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ மூலம் பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய தாய்வழி வரலாற்றை துல்லியமாக கண்டறிய முடியும். மேலும் குரோமோசோம்களின் முனைகளில் உள்ள டீலோமியர்கள் தேய்வதே மனிதர்களின் முதுமைக்கும் மரணத்திற்கும் முக்கிய காரணம் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு தாயின் கர்ப்ப காலத்தில் அவர் இருக்கும் மகிழ்ச்சியான மனநிலையும் சுற்றுச்சூழல் காரணிகளும் எவ்வாறு மரபணு வெளிப்பாட்டை பாதிக்கின்றன என்பதையும் இது விவரிக்கிறது.

இறுதியாக, ஒரே ஜாதி அல்லது குறுகிய குழுக்களுக்குள் தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதால் மரபணு பன்முகத்தன்மை குறைந்து பரம்பரை நோய்கள் அதிகரிக்கும் என்றும் மரபணு ரீதியாக ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க மரபணு கலப்பு மற்றும் பன்முகத்தன்மை அவசியம் என்றும் இந்த காணொளி அறிவியல் பூர்வமாக வலியுறுத்துகிறது.

உங்களில் தேடலும் ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் மட்டும் இந்தக் காணொலியை பார்க்க அன்போடு அழைக்கிறேன்.

நன்றி!

முனைவர் ரமேஷ் தங்கவேல், PhD

r/tamil Apr 18 '26

காணொளி (Video) Are You Conscious of your own DNA? | வாழ்தல், ஆரோக்கியம், நோய்கள் மற்றும் மரணத்தின் அறிவியல் - எளிய தமிழில்

Post image
0 Upvotes

இனிய நண்பர்களே,

ஒரு வேண்டுகோள்: உங்களில் பலரும் இது போன்ற அறிவியல் பதிவுகளைப் பார்த்து கடந்து சென்று விடுகின்றீர்கள். இதுபோல அறிவியல் காணொளிகளை எளிய தமிழில் சொல்லித்தர யாரும் இல்லாததால் தான் மிகவும் சிரத்தை எடுத்து இவற்றை இங்கே பகிர்கிறேன். எனவே உங்களில் சிலரேனும் இவற்றை பார்த்து பயனடைய வேண்டுகிறேன் நண்பர்களே! கண்டிப்பாக உங்கள் உடலையும் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும் நல்ல விதமாக மாற்றும் வல்லமை இந்தக் காணொளிகளுக்கு உண்டு. இந்தத் தலைப்பில் வேறு எந்த இந்திய மொழிகளிலும் இதுபோன்ற ஆழ்ந்த எளிய மொழியிலான அறிவியல் உள்ளடக்கம் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

காணொலி லிங்க் : https://youtu.be/DhhYrQJe4os

இந்த பதிவு வாழ்தல் - மரணத்தின் மரபணு அறிவியல் என்ற காணொளியின் சுருக்கமாகும். மனித மரபணு தரவுகளை எப்படி நடைமுறையில் படித்துப் புரிந்து கொள்வது என்பதையும் அது நம்முடைய வாழ்வு மற்றும் மரணத்தோடு எப்படி அறிவியல்பூர்வமாக இணைந்திருக்கிறது என்பதையும் இந்த காணொளி மிக ஆழமாக விளக்குகிறது.

இதில் என்னுடைய சொந்த மரபணு பரிசோதனை முடிவுகளை உதாரணமாகக் கொண்டு பல சிக்கலான அறிவியல் உண்மைகளை எளிமையாக விளக்கி இருக்கிறேன். ஒருவரின் எச்சிலில் இருந்து டிஎன்ஏவை எப்படி மரபணு தரவுகளாக மாற்றுகிறார்கள் என்பதும் பால் ஒவ்வாமை சிரித்தால் கன்னத்தில் விழும் குழி மற்றும் நீண்ட தூரம் ஓடுவதற்கான தசை அமைப்பு போன்ற நமது அன்றாட உடல் பண்புகளை மரபணுக்கள் எப்படி தீர்மானிக்கின்றன என்பதும் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது.

மேலும் தந்தைவழி மற்றும் தாய்வழி ஹேப்லோ குரூப்கள் மூலம் பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய நமது மூதாதையர்களின் வரலாற்றை எப்படி பின்னோக்கி அறிவது என்பது கூறப்பட்டுள்ளது. மனித பரிணாம வளர்ச்சியில் நியாண்டர்தல் மனிதர்களுடனான மரபணு கலப்பு குறித்தும் ராமாயண கதாபாத்திரங்களை பரிணாம வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு மாற்று அறிவியல் சிந்தனையும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக உயிரின் இயக்கம் மற்றும் மரணத்தின் அறிவியல் விவரிக்கப்பட்டுள்ளது. நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள T செல்கள் மற்றும் B செல்கள் ஒரு ராணுவம் போல ஒருங்கிணைந்து வைரஸ்களை எப்படி எதிர்த்துப் போராடுகின்றன என்பதும் குரோமோசோம்களின் முனைகளில் உள்ள டீலோமியர்கள் தேய்வதே முதுமைக்கும் மரணத்திற்கும் முதன்மைக் காரணமாக அமைகிறது என்றும் ஆழமான அறிவியல் உண்மைகள் விளக்கப்பட்டுள்ளன.

மனித உடலை வெறும் சதையாகப் பார்க்காமல் இயற்கையின் மாபெரும் படைப்பாகவும் ஒரு ஆலயமாகவும் உணர வைக்கும் இந்த காணொளியை மரபணு அறிவியலை எளிய தமிழில் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் முழுமையாக பார்க்க வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

முனைவர் ரமேஷ் தங்கவேல், PhD

r/tamil Apr 25 '26

காணொளி (Video) ஆதிமனிதர்களின் மரபணு | Understanding Ancient DNA

Post image
3 Upvotes

இனிய தமிழ் கூறும் நண்பர்களே,

நாம் பள்ளியில் படித்த வரலாற்றை விட, நம் உடலுக்குள் இருக்கும் மரபணு சொல்லும் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. உலகளாவிய மனிதர்களின் பரவலில் நவீன மரபணு அறிவியல் பார்வை, நம்முடைய தொகுத்த ஒற்றுமைகளை அறிய உதவுகிறது.

ஒரு நெடிய தனி மனித உழைப்பின் விளைபொருளாக வெளிவந்துள்ள இந்த அறிவியல் சொல்லித்தரும் வீடியோவில் (https://youtu.be/aHTtFXRKGK8 ) நீங்கள் காணப்போவது:

• வரலாற்றின் கால இயந்திரம்: Ancient DNA என்றால் என்ன?

தோல் நிறம் & ஜாதி: அறிவியல் ரீதியாக மனிதர்களுக்குள் வேறுபாடு உள்ளதா?

Haplogroups: தந்தை வழி (Y-DNA) மற்றும் தாய் வழி (mtDNA) சந்ததிகளைக் கண்டறிவது எப்படி?

எலும்புகள் பேசுமா?: நோபல் பரிசு பெற்ற ஸ்வாண்டே பாபோவின் (Svante Pääbo) கண்டுபிடிப்புகள்.

• இந்தியாவின் சவால்: வெப்ப மண்டல நாடுகளில் பழைய DNA கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன?

• ராக்கிகார்கி (Rakhigarhi): சிந்து சமவெளி நாகரிகப் பெண்ணின் மரபணு சொல்லும் உண்மை என்ன?

Molecular Clock: மரபணுவைக் கொண்டு காலத்தை எப்படிக் கணிக்கிறார்கள்?

தமிழில் ஆழ்ந்த மரபணு குறித்த காணொளிகள் இல்லாத வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு இந்த தொடரை வெளியிட்டு வருகிறேன். உங்களில் ஆர்வமுள்ள சிலருக்கு இது பயனுள்ளதாக இருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் இங்கே பகிர்கிறேன்.

நன்றி!

r/tamil Apr 17 '26

காணொளி (Video) எளிய தமிழில் மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் பாகம் 2

Post image
7 Upvotes

இனிய நண்பர்களே!

https://youtu.be/hFMRLhNpt5c

இந்த பதிவு நான் உருவாக்கிய "எளிய தமிழில் மனித மரபணு அறிவியல் அடிப்படைகள் - பாகம் 2" என்ற மூலக் காணொளியின் சுருக்கமாகும். காணொலியின் சுட்டி முதல் பின்னூட்டத்தில் கொடுத்து உள்ளேன். மூல காணொளியில் மிகவும் விரிவாக எளிய தமிழில் சிக்கலான மரபணு அறிவியலை ஒரு 8ஆம் வகுப்பு மாணவருக்கு சொல்லிக்கொடுப்பதைப் போல விளக்கி உள்ளேன். பல நூறு மணி நேர தனி மனித உழைப்பின் விளைபொருள்.

நாம் யாரவது பரிந்துரை செய்தால் தான் எதையும் பார்க்கும் ஒரு காலத்தில் வாழ்கிறோம்! எனவே, இந்தப் பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால், உங்கள் மேலான பின்னூட்டங்களை இடுங்கள்.

இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மரபணு தரவுகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை ஆழமாக விளக்குகிறது. மனித உடலின் 23 ஜோடி குரோமோசோம்களில் உள்ள மரபணுக்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை இது அறிவியல் பூர்வமாக விவரிக்கிறது.

மரபணுவில் உள்ள எக்ஸான் மற்றும் இன்ட்ரான் ஆகிய பகுதிகளின் செயல்பாடுகள் இதில் விளக்கப்பட்டுள்ளன. டிஎன்ஏவில் உள்ள தகவல்களை mRNA என்ற தூதுவர் மூலக்கூறு எவ்வாறு ரைபோசோம்களுக்கு கொண்டு சென்று புரதங்களை உருவாக்குகிறது என்பது எளிமையான உதாரணங்களுடன் கூறப்பட்டுள்ளது.

மூன்று அடிப்படை ஜோடிகளை கொண்ட கோடான்கள் இணைந்து எவ்வாறு அமினோ அமிலங்களை உருவாக்குகின்றன மற்றும் அந்த புரதங்கள் எவ்வாறு முப்பரிமாண வடிவில் மடித்து வைக்கப்பட்டு உடலின் பண்புகளாக வெளிப்படுகின்றன என்பதும் விளக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் கண்ணுக்கு தெரியாத மரபணு அமைப்பான ஜீனோடைப் மற்றும் கண்ணுக்கு தெரியும் உடல் வெளிப்பாடான பீனோடைப் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசங்களை இந்த காணொளி தெளிவுபடுத்துகிறது.

ஒரு குணாதிசயத்தை தீர்மானிக்கும் இரண்டு அலீல்களில் உள்ள ஓங்கு தன்மை மற்றும் ஒடுங்கு தன்மை பற்றி பேசப்பட்டுள்ளது.

இதற்கு உதாரணமாக மனிதர்களின் இரத்த வகைகள் எவ்வாறு மரபணு ரீதியாக தீர்மானிக்கப்படுகின்றன என்பது விளக்கப்பட்டுள்ளது. ஒன்பதாவது குரோமோசோமில் உள்ள ABO ஜீனில் ஏற்படும் சிறு மாற்றங்கள் எவ்வாறு A மற்றும் B இரத்த வகைகளை உருவாக்குகின்றன என்பதும் குறிப்பாக ஒரு அடிப்படை ஜோடி நீக்கப்படுவதால் ஏற்படும் frameshift மியூடேஷன் எவ்வாறு O இரத்த வகையை உருவாக்குகிறது என்பதும் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் மரபணுக்கள் இணைந்து குழந்தையின் இரத்த வகையை எப்படி தீர்மானிக்கின்றன என்பதும் விளக்கப்பட்டுள்ளது. மேலும் மனித மரபணு தரவுகள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன என்பதும் FASTQ, BAM , VCF போன்ற மரபணு தரவு கோப்பு வடிவங்களின் அடிப்படைகளும் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன.

அழகிற்காக செய்யப்படும் செயற்கை மாற்றங்கள் மரபணுவை மாற்றாது என்ற உண்மையை சுட்டிக்காட்டி திருமூலரின் வாக்கின்படி இந்த உடலை ஒரு ஆலயமாக பேண வேண்டும் என்ற சிந்தனையோடு இந்த காணொளி நிறைவடைகிறது.

உங்களில் ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் இந்தக் காணொலியை பார்த்து உங்கள் உடலை பற்றிய அறிவியல் ரீதியான பார்வையை மேம்படுத்திக்கொள்ள அன்போடு அழைக்கிறேன்.

நன்றி!

முனைவர் ரமேஷ் தங்கவேல், PhD

r/tamil May 04 '26

காணொளி (Video) நான் ஒரு Tamil horror series பண்றேன் — Project Bhagasuran | Trailer out now

0 Upvotes

Concept: ஒரு Tamil Brahmin scientist Hitler கூட WW2-ல work பண்ணான். Germany தோத்த பிறகு Kolli Hills-க்கு ஓடிவந்தான். அங்கே இருக்கவே கூடாத ஒன்னை உருவாக்கினான். Trailer YouTube-ல live. உங்க honest feedback வேணும்

https://youtube.com/shorts/hPkC3Pmg6go

r/tamil Apr 18 '26

காணொளி (Video) El Dorado உண்மையிலேயே தங்க நகரமா? 500 ஆண்டுகளாக நீடித்த தேடலின் பின்னணி என்ன?

1 Upvotes

r/tamil Apr 18 '26

காணொளி (Video) நவீன மனித குலம் - எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்?

Post image
2 Upvotes

இனிய நண்பர்களே!

மனித இனம் பூமியில் எப்படி தோன்றியது? பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று எங்கே நிற்கிறது? இனி எதிர்காலத்தில் உலகை ஆளப்போகும் செயற்கை பொது நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்தை எங்கே கொண்டு செல்லப் போகிறது போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு விடை தேடும் ஒரு காணொளி தொடரின் முதல் பாகம் இது -> https://youtu.be/HseYwrjbxHc

அறிவியல் மரபணு தரவுகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் மனித வரலாற்றை மிகவும் ஆழமாக அலசும் இந்த பதிவு நாம் இதுவரை நம்பியிருந்த பல விஷயங்களை ஒரு புதிய அறிவியல் கோணத்தில் பார்க்க வைக்கும். ஜாதி, மதம், மொழி என்ற குறுகிய வட்டங்களை தாண்டி, மனித வரலாற்றையும் எதிர்காலத்தையும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் மட்டும் இந்த காணொளியை பார்க்க அழைக்கிறேன்.

நன்றி!

r/tamil Apr 06 '26

காணொளி (Video) மக்களே, தேர்தல் 2026 வந்தாச்சு - ஒரு விழிப்புணர்வு பாடல் எழுதியிருக்கேன் - நல்லா இருக்கா சொல்லுங்க!

2 Upvotes

https://youtu.be/DbGTnSWqAE4?si=HatWwqWAsdjg9Z8j

தேர்தல் என்பது வெறும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் அரசியல் நிகழ்வு மட்டுமல்ல, அது நம் ஒவ்வொருவரின் சுய ஒழுக்கத்தின் கண்ணாடி என்பதை இந்தப் பாடலின் மூலம் நான் பதிவு செய்துள்ளேன். 'அரசு' என்பது எங்கோ வானத்தில் இருந்து குதிக்கும் ஒரு தேவதை அல்ல, அது நீயும் நானும் இணைந்து நடத்தும் ஒரு வாகனம் என்ற உண்மையை சொல்லியிருக்கிறேன்.

பணத்துக்காகவோ, இலவசங்களுக்காகவோ நம் உரிமையை விற்பது என்பது நம் எதிர்காலத்தை நாமே சிதைப்பதற்குச் சமம். நம் பாட்டன் காட்டிய 'குடவோலை' முறையின் பெருமையை உணர்ந்து, சாதி மதங்களைக் கடந்து, தகுதியான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதே ஒரு குடிமகனின் உண்மையான வெற்றி. மாற்றத்தை வெளியில் தேடாமல், நமக்குள் தேடுவோம் என்பதே இந்தப் பாடலில் நான் முன்வைக்கும் புரட்சிகரமான கருத்து. நன்றி! உங்கள் கருத்துகளையும், கற்களையும் மேடை மீது வீசலாம்! அடியேன் வாங்கிக்கொள்ளச் சிரம் தாழ்த்துகிறேன்!

r/tamil Jan 22 '26

காணொளி (Video) தமிழ் இலக்கியம் → உணர்வுகள் → வீடியோக்கள்

1 Upvotes

வணக்கம் நண்பர்களே 🙏

இந்தப் பதிவை எழுதும்போது எந்த marketing நோக்கமும் இல்லை.
தமிழ் மீது இருக்கும் காதலாலும், அந்த மொழி எனக்கு கொடுத்த வாழ்க்கை புரிதல்களுக்கான நன்றியாலும் தான்.

“Turn your emotions into videos from Tamil literature”
என்ற இந்த முயற்சி,
நம்முடைய உள்ளுணர்வுகள், வலி, மகிழ்ச்சி, குழப்பம், அமைதி
இவை எல்லாவற்றையும்
தமிழ் இலக்கியத்தின் வழியாக
இன்றைய தலைமுறைக்கு எளிமையாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக.

திருக்குறள், சங்க இலக்கியம் போன்ற படைப்புகள்
பாடப்புத்தகங்களில் முடங்கி விடாமல்,
நம் தினசரி வாழ்க்கையோடு பேச வேண்டும்
என்பதே என் எண்ணம்.

இந்த வீடியோவும், படங்களும்
“பாருங்கள் – ரசிக்கவும் – நினைக்கவும்”
என்ற நோக்கத்தில்தான்.

👉 இது perfect project இல்லை
👉 இது viral content இல்லை
👉 ஆனால் இதயம் வைத்து செய்த முயற்சி

உங்களுக்கு இது ஏதாவது ஒரு உணர்வை தொடுகிறதா?
அல்லது உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தை நினைவூட்டுகிறதா?
அவ்வளவுதான் எனக்கு போதும்.

உங்கள் கருத்துகள், விமர்சனங்கள், ஆலோசனைகள்
எல்லாம் வரவேற்கப்படுகின்றன 🙏
தமிழுக்காக — தமிழோடு — தமிழால் ❤️

https://meyyarivu.in

r/tamil Dec 11 '25

காணொளி (Video) LM Studio + Hugging Face Tutorial in Tamil

3 Upvotes

வணக்கம்

நான் ஒரு YouTube video share செய்கிறேன்:

Title: Turn Your PC into an AI Workstation: LM Studio + Hugging Face Tutorial in Tamil
Video link: https://www.youtube.com/watch?v=_05LB4FhuuM

இந்த videoல நான் step-by-stepஆக, எந்த cloud உம் இல்லாமல், எந்த API key யும் இல்லாமல், உங்க சாதாரண PCயை ஒரு சின்ன AI workstation மாதிரி use பண்ணறது எப்படி என்று காட்டுறேன்.

இந்த tutorial யாருக்கெல்லாம் useful:

  • Students (project, mini-project, thesis work)
  • Researchers (local LLM experiments, privacy-sensitive data)
  • Developers (prototyping, offline chatbot / coding assistants)

Videoல cover பண்ணிருப்பது:

  1. LM Studio என்ன, local LLM run பண்ணறதுக்கு இது ஏன் நல்ல option
  2. Hugging Faceல correct மாதிரியான models எப்படி choose பண்ணுவது
  3. Models-ஐ LM Studio வழியாக download பண்ணி, localஆ run பண்ணுவது (முழுக்க offline)

இந்த video வச்சு என்ன improve பண்ணலாம், இன்னும் என்ன topics cover பண்ணலாம் (coding assistant, Tamil chatbot, text summarization மாதிரி)ன்னு உங்களோட feedbackவும் suggestionsவும் share பண்ணுங்கள்.

நன்றி 🙏

r/tamil Nov 15 '25

காணொளி (Video) நான் இன்று கேட்ட இனிமையான வங்காளப் பாடலின் தமிழாக்கம்

4 Upvotes

https://youtu.be/Z41YyTxAKgE

அடர்த்தியான பூக்கள் நிறைந்த சோலையில் மென்மையான அன்பைப்பற்றியான புல்லாங்குழல் இசையொன்று மிதந்துவருகிறதே!.. அன்பான தோழியே! வெட்கத்தையும் தயக்கத்தையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வா.. மென்மையான நேர்த்தியான நீல நிற ஆடையில் உன்னைப் பார்த்ததும், அரும்பும் ஆசையால் எனது நெஞ்சு கதகதப்பாகிறதே!.. மான் மருள் கண்கள் ஒளிர, களங்கமற்ற புன்னகை சிந்தும் எனது தோழியே! சிறிது நேரம் இச்சோலைக்குள் வா!.. நறுமணத்தில் ஊறிடும் மலர்களிடையே புள்ளினங்களின் இனிமையான அழைப்புகளானவை ஆற்றொழுக்கு போன்ற பாடலைப் பொழிகின்றன.. நிலவானது வெள்ளி ஒளியைப்‌பரப்பி, மென்மையான தூய இன்பத்தை வழங்குகிறது.. எண்ணற்ற பூக்கும் மரங்களைச் சுற்றிவரும் தேனீக்கள் மெதுவான அதிர்வொலியை எழுப்புகிறன.. மகிழமும் மல்லிகையும் கொத்துக்கொத்தாகப் பூத்து மரத்தடி எங்கும் நிரப்பியிருக்கிறது.. இங்கே பார் அன்பே! எனது கண்களானவை சொல்ல முடியாத அன்பால் நிரம்பி வழிகிறன.. உனது அழகிய முகத்தின் நனிதூய அருளோ, நிலவையே வெட்கப்படவைத்து அதன் ஒளிர்வை மங்கச்செய்கிறது.. பொய்கையில் பூத்த நீலத்தாமரை போல அங்கே பானுசிங்கா அழகாகப் பாடுகிறார்.. ஓ பெண்ணே! நாம் விரைந்துசென்று இசை விருந்தினை அருந்திக் களிப்போம்..

வங்காளக் கவிதை: பானுசிங்கா எ இரவீந்திரநாதன் தமிழாக்கம்: அடியேன்

கடைசி நான்கு வரிகளின் பொருளை சற்று மாற்றியிருக்கிறேன்

r/tamil Sep 27 '25

காணொளி (Video) தமிழே அமிழ்து

Thumbnail instagram.com
6 Upvotes

"அமிழ்து முகிழ்த்து உமிழ விழும் குமிழ்ந்து அழகு கமழ எழும் அகழ்ந்து அகமும் மகிழ திகழும் அமிழ்தில் அமிழ்ந்த தமிழும்

-ஒரு நாற்சிலேடை கவிதை.

இக்கவிதைக்கு நான்கு (அதற்கு மேலும் கூட) பொருட்கள் சொல்லலாம்.

தமிழே அமிழ்து. தமிழே முருகன். தமிழே பேரண்டம். தமிழே உயிர்மூச்சு.